தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

Siva

வெள்ளி, 27 டிசம்பர் 2024 (10:10 IST)
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 200 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை இருப்பதாகவும் இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து   7,150 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   57,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,798 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,384 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்