திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

Prasanth Karthick

வெள்ளி, 27 டிசம்பர் 2024 (10:30 IST)

திமுக ஆட்சில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியுள்ளார்.

 

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் திமுகவை சேர்ந்தவர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என செருப்பை கழற்றி எறிந்தார். அத்தோடு திமுகவை கண்டித்து தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள போவதாகவும், 45 நாட்கள் விரதமிருந்து அறுபடை முருகன் கோவிலுக்கும் சென்று முறையிடப்போவதாகவும் கூறியிருந்தார்.

 

அதன்படி இன்று காலை கோவையில் உள்ள தனது வீட்டின் முன்னால் சட்டையின்றி வந்து சாட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டுள்ளார் அண்ணாமலை. அதை தொடர்ந்து அவர் முருகனுக்கு விரதத்தை தொடங்குகிறார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்