கொரோனா என்பது வைரஸா? பீர் பாட்டிலா? குழப்பத்தில் நெட்டிசன்கள்

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (08:59 IST)
சீனா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பரவி விட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக 180 பேர் பலியாகி இருப்பதாகவும் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் கொரோனா வைரஸைகட்டுப்படுத்த இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் உலக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ஐரோப்பாவில் உள்ள ஒரு பீர் கம்பெனியின் பெயர் கொரோனா என்று உள்ளது. பலர் கூகுள் சியர்ச்சில் கொரோனா என்று தேடும்போது இந்த பீர் கம்பெனியின் பெயர் தான் முதலில் வருவதால் பலர் குழப்பமடைந்துள்ளனர் 
 
கொரோனா என்பது வைரஸ் அல்லது பீரா? என்ற குழப்பம் நெட்டிசன்கள் இடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த சில நெட்டிசன்கள் என்பது ஐரோப்பிய நாடு ஒன்றில் கொரோனா பீர் கம்பெனி ஒன்று இருப்பதாகவும் ஆனால் கொரோனா பீருக்கும் கொரோனா வைரஸுக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் இந்த கொரோனா பீரை குடிப்பதால்தான் கொரோனா வைரஸ் தாக்குவதாக வதந்தியை பரப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனையடுத்து கொரோனா பீர் கம்பெனி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் இது தற்செயலாக நடந்த பெயர் ஒற்றுமை என்றும் கொரோனா வைரசுக்கும் எங்கள் நிறுவன பீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்