சீனாவில் கொரனா வைரஸால் இது வரை 132 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அங்கு 3,554 பேருக்கு கொரனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடையும் எனவும், இன்னும் 10 நாட்களில் வைரஸ் தாக்குதல் வீரியம் அடையும் எனவும் மருத்துவ நிபுணர் குழு எச்சரித்துள்ளது.
இதனை தொடர்ந்து சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அத்துறை அதிகாரிகள், “சீனாவின் உகான் மற்றும் ஹுபாய் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் அனைத்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கிருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்றுமாறு எந்த நாடும் கேட்டுக்கொண்டால், அதற்கான உதவியை சீனா அளிக்கும்” என தெரிவித்துள்ளனர்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல், பல நாடுகளைத் தாண்டி இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.