சாட் ஜிபிடியில் இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேனை வரவேற்ற மைக்ரோசாப்ட்.. ஏ.ஐ பிரிவில் வேலை..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (08:13 IST)
சாட் ஜிபிடி நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக இருந்த சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை மைக்ரோசாப்ட் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது.  

சாம் ஆல்ட்மேன், கிரேக் பிளாக் மால் ஆகிய இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்த உள்ளதாகவும் இருவரும் ஏஐ தொடர்பான ஆராய்ச்சிக்கான புதிய குழுவை வழி நடத்துவார்கள் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெள்ளா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேக் பிளாக்மைல் ஆகியோருக்கு தேவையான அனைத்து சலுகைகள் மற்றும் ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் பெரும் கவனம் செலுத்தி வரும் நிலையில் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேக் பிளாக் மால் ஆகிய இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளது நிறுவனத்திற்கு பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது.  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்