கீரிடம் வைத்த டம்மி ராணியா மன்னர் சார்லஸின் 2வது மனைவி??

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (09:19 IST)
கமிலாவுக்கு ராணி பட்டம் வழங்கப்படவில்லை மாறாக "குயின் கன்சார்ட்" எனும் பட்டம் வழங்கப்படும்.


இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.

ராணி எலிசபத்தின் மறைவை தொடர்ந்து இவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அரியணை ஏறியுள்ளார். இவரது இரண்டாவது மனைவி கமிலா ராணியாகியுள்ளார். ராணி என்றால் ராணி பட்டம் இவருக்கு வழங்கப்படவில்லை மாறாக "குயின் கன்சார்ட்" (Queen Consort) என மறைந்த ராணி எலிசபத்தால் தெரிவிக்கப்பட்டது.
ALSO READ: அரியணை ஏறிய சார்லஸ்… மகன்கள் வில்லியம் & ஹாரிக்கு தந்தது என்ன??
பிரிட்டனின் முதல் பெண்மணியைப் போலவே குயின் கன்சார்ட் ஆன கமிலாவுக்கு வேலை விவரம் இல்லை, அதிகாரப்பூர்வ கடமைகள் மற்றும் சம்பளம் இல்லை. பொதுவாக, ஒரு ராணி துணைவியின் வேலை ராஜாவை தன்னால் முடிந்த விதத்தில் ஆதரிப்பதாகும். கோஹினூர் வைரம் அடுத்து அரசராகும் சார்லஸின் மனைவி கமிலாவை சென்றடையும் என கூறப்படுகிறது. 

இந்தியாவின் அரிய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரம் 1850ல் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அரிய வகை வைரமான இது ஆண் அரசர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கும் சக்தி கொண்டது என நம்பப்பட்டதால் பெண்ணரசிகள் அணியும்படி மகாராணியின் கிரீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

சார்லஸ் மற்றும் கமிலவுக்கு முந்தைய திருமணத்தில் குழந்தைகள் உள்ளனர். எனினும் அடுத்த அரச வாரிசாக சார்லஸ் – முதல் மனைவி டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் வருவார். அதன் பிறகு வில்லியமின் மூத்த மகன் அரியணைக்கு வருவான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்