அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், அவரது வங்கி கணக்கில் அதிக பரிவர்த்தனை இருந்ததாக செய்திகள் வெளியாகியதையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி, பெசன்ட் நகர், எம்.சி.ஆர். நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுபோல், அமைச்சர் கே. என். நேருவின் மகன் மற்றும் பெரம்பலூர் தொகுதி மக்களவை எம்பி அருண் அவர்களுக்கு சொந்தமான சில இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.