இலங்கையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (23:25 IST)
இலங்கையில் சில மாதங்கள் முன்னதாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் உணவுப் பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. பெட்ரோல், கியாஸ், உணவுப் பொருட்கள் விலை விண்ணை தொட்டது.. இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அரசியல்வாதிகள் பலரின் வீட்டை தீக்கிரையாக்கினர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் மாளிகையும் தாக்கப்பட்ட நிலையில் அவர் இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவு, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தாய்லாந்தில் அடைக்கலமானார்.

பின்னர் இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கெ பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் நிலைமை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை சென்றடைந்தார்.

தற்போதும் மக்கள் அத்தியாசியப் பொருட்களுக்குப் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க வேண்டுமென மக்கள்  கொழும்பு கலிமுகத்திடலில்  , அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்