இந்த வெப் சிரிஸை குழந்தைகளை பார்க்க விடாதீங்க! – பிரிட்டன் எச்சரிக்கை!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (14:55 IST)
நெட்ப்ளிக்ஸில் சமீபத்தில் வெளியான ஸ்குவிட் கேம் இணைய தொடரை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என பிரிட்டன் பள்ளிகள் எச்சரித்துள்ளன.

சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான கொரியன் வெப் சிரிஸ் ஸ்குவிட் கேம். கொரியாவின் பழமையான சில விளையாட்டுகளை வைத்து ஆட்களை கொல்வது போல உருவான இந்த கதைகளம் பலரை கவர்ந்துள்ளது.

அதேசமயம் இந்த இணைய தொடரில் வரும் காட்சிகளை சிறுவர்கள் பலர் ரீ க்ரியேட் செய்து நடித்து டிக்டாக் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருவது குழந்தைகள் நல ஆர்வலர்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பள்ளிகள் மற்றும் பெட்போர்ட்சைர் நகர கவுன்சில் ஆகியவை இந்த இணைய தொடரை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்