ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: மதகுரு உள்பட18 பேர் பலி

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (20:05 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் வெடித்த குண்டு வெடிப்பு காரணமாக மதகுரு உள்ளிட்ட 18 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஆட்சியின் போது குண்டுவெடிப்பு அவ்வப்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆப்கானில் உள்ள மசூதியில் பலர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 18 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் அதில் மசூதியின் இமாமாக உள்ள ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவின் பொறுப்பு ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்