ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடித்து சிதறிய குண்டு! – 30க்கும் மேற்பட்டோர் பலி!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (08:43 IST)
தாலிபான் ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்ததில் 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளன. அவற்றில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லீம்கள் இடையே நடக்கும் மோதலும் ஒன்று.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரபல மசூதி ஒன்றில் நேற்று தொழுகைக்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது மசூதிக்குள் பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இது ஷியா, சன்னி பிரிவினர் இடையேயான மோதலின் விளைவாக நடந்ததாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்