கொரோனா வைரஸை உருவாக்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்: மருந்து கண்டுபிடிக்க திட்டம்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (12:19 IST)
உலகம் முழுவதும் பல உயிர்களை பலி கொண்டு வரும் கொரோனா வைரஸை ஆய்வுக்காக மீண்டும் உருவாக்கியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமல்லாமல் தைவான், ஹாங்காக், தாய்லாந்து, ஜப்பான் என உலகம் முழுவதும் 17 நாடுகளில் கொரொனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட கொரோனா வைரஸின் மாதிரியை கொண்டு மீண்டும் கொரோனா வைரஸை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கொரோனா வைரஸை நகலெடுத்து மீளுருவாக்கம் செய்வதன் மூலம் அதன் வளர்ச்சி நிலையை கண்டறிய முடியும் எனவும், அதன் வளர்ச்சி நிலையை கண்டடைவது மூலம் அவற்றை அழிப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கலாம் எனவும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனாவின் நகலை கண்டறிந்துள்ளதால் விரைவிலேயே அதற்கான மருந்தையும் கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்