வைரஸ் பரவ காரணம் நீங்கதான்; ஒழுங்கா பணம் கொடுங்க! – சீனா மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்கர்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (14:30 IST)
உலகம் முழுவதும் வைரஸ் பரவ காரணம் என சீனாவை குற்றம் சாட்டி அமெரிக்கர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஒருவர் உலகம் முழுவதும் கொரோனா பரவ சீனாவே காரணம். இதற்கு தண்டனையாக சீனா 20 ட்ரில்லியன் டாலர்களை உலக நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சீனா உயிரியல் போரை தொடுப்பதற்காகதான் இந்த வைரஸை தயாரித்தது என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தினாலும் கூட சீனாவால் உலக நாடுக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு வரும் காலத்தில் உலக நாடுகள் சீனாவிடமிருந்து இழப்பீடுகளை எதிர்பார்க்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்