இறந்தவர்களின் நுரையீரலில் உயிருள்ள வைரஸ்: எச்சரிக்கும் சீன டாக்டர்கள்!

வெள்ளி, 27 மார்ச் 2020 (09:36 IST)
கொரோனா பாதித்து இறந்தவர்களின் நுரையீரலில் உயிருடன் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா உலகம் முழுவதும் அதீத உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 22,000 ஆக இருந்த நிலையில், தற்போது 24,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உலக அளவில் ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
சீனாவில் யூகான் பகுதியில் உருவெடுத்த கொரோனா வைரஸ் அங்கு 3,287 உயிர்களை பறித்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா தொற்று யாருக்கும் இல்லை, மேலும் அங்கு இயல்பு நிலையும் துவங்கியுள்ளது. 
 
இந்நிலையில், கொரோனா பாதித்து இறந்தவர்களின் நுரையீரலில் உயிருடன் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொரோனாவால் இறந்த 29 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த சீன டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது... 
 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸ் சீர்குலைக்கிறது. மேலும், நுரையீரலை வைரஸ் கடுமையாக சேதப்படுத்துகிறது. நோயாளி இறந்த பின்னரும் நோயாளியின் நுரையீரலில் உயிருடன் இந்த வைரஸ் இருக்கிறது. எனவே, கொரோனாவால் இறந்தவர்களின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்காமல் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும் என எச்சரித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்