அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று கேட்கப்பட்டபோது, "சட்டசபை தேர்தலில் எதிர்கொள்ள நாங்கள் கையாளும் தந்திரங்களையும், வியூகங்களையும் வெளியில் சொல்ல முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்பது உண்மைதான் என்றும், பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டால் அதிமுக கூட்டணிக்கு விஜய் வரத் தயாராக இருப்பதாகக் கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.