டிக்டொக் செயலிக்கு அமெரிக்கா தடை: ரசிகர்கள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:35 IST)
டிக் டாக் செயலிக்கு ஏற்கனவே இந்தியா உள்பட பல நாடுகள் தடை செய்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள முக்கிய மாகாணத்தில் டிக் டாக் செயலிக்கு  தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அரசு அலுவலகங்களில் டிக் டாக் செயலி பயன்படுத்தக்கூடாது என கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 
 
பயனர்களீன் தரவுகளை சீன அரசுடன் டிக் டாக் நிறுவனம் பகிர்ந்து கொள்வதாக இருந்த குற்றச்சாட்டை அடுத்த இந்த தடை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள முக்கிய மாகாணமான மாண்டனா என்ற மாகாணத்தில் சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்