ஏற்கனவே, தி கேரளா ஸ்டோரி என்ற பாலிவுட் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக அந்த படத்தை தடை செய்ய கோரி பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதில் அளித்தது.
இந்த வழக்கில் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படம் எங்கும் தடை செய்யப்படவில்லை என்றும், படத்திற்கு பார்வையாளர்கள் அதிகம் இல்லாததால் திரையரங்குகளே படம் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்தை மேற்கு வங்கத்தில் திரையிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். மேலும், தமிழ்நாட்டில் இப்படத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் தடை செய்யக்கூடாது எனவும், இப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.