ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் முகத்தை சிதைத்த கொடூரன்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (10:39 IST)
துருக்கியில் பெண் ஒருவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை ஒரு காமக்கொடூரன் கடுமையாக தாக்கியுள்ளான்.
இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தார். அப்போது அவருக்கு மார்ஷல் என்ற நபர் அறிமுகமானான்.
 
இரவு தங்குவதற்கு இடமில்லை என மார்ஷல் கூறியதால் பரிதாபப்பட்ட அந்த இளம்பெண், வேண்டுமென்றால் எனது அறையில் தங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். பிறகு தான் வந்தது வினை.
 
ஹோட்டலுக்கு சென்ற அவர் பெட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். மார்ஷல் அங்கிருந்த ஷோபாவில் உறங்கினான். சிறிது நேரம் கழித்து மார்ஷல் அந்த பெண்ணிடம், தவறாக நடக்க முற்பட்டான். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே கொடூரன் மார்ஷல், அந்த பெண்ணை கடுமையாக தாக்கினான்.
 
இந்த கொடூர தாக்குதலில் அந்த பெண்ணின் முகம் முழுவதும் சிதைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடலில் 50 தையல்கள் போடப்பட்டது. போலீஸார் மார்ஷலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்