தாத்தாக்களுடன் மட்டுமே டேட்டிங்... வித்தியாசமான காரணம் சொல்லும் இளம்பெண்

சனி, 15 செப்டம்பர் 2018 (09:21 IST)
பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வயதான ஆண்களுடன் மட்டுமே தான் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியிருக்கிறார்.
டேட்டிங் ஆப் மூலம் ஆண் பெண் இருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் நட்பு பாராட்டி பழகலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு இன்றைய கால இளம்தலைமுறையினர் பலர் அடிமையாடிவிட்டனர் என்றே சொல்லலாம். இளசுகள் இளம் ஜோடியினரை மட்டுமே தேடுவர். 
 
ஆனால் பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வயதான ஆண்களுடன் மட்டுமே டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார். அதற்கு அவர் கூறியிருக்கும் காரணம் என்னவென்றால் நான் வயதான மற்றும் பணக்கார ஆண்களுடன் மட்டுமே டேட்டிங் செல்ல விரும்புவேன். ஏனென்றால் அவர்களிடம் அதிகமாக பணம் இருக்கும், சொகுசு வாழ்க்கை, ஆடம்பர சுற்றுலா என பலவற்றை அனுபவிக்க முடியும். ஒரு முறை டேட்டிங் சென்றால் 800 பவுண்ட்கள் வாங்குவேன்.
 
அந்த பணத்தை வைத்து நான் செய்யும் தொழிலை விரிவுபடுத்துகிறேன். இதுவரை 10 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன் என அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த சொகுசு வாழ்க்கைக்காக தனது காதலரை பிரிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்