ஜன்னல் சீட் கேட்டு டார்ச்சர் செய்த பயணி: சமயோஜிதமாக செயல்பட்ட விமான பணிப்பெண்

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:31 IST)
ஜன்னல் சீட் கேட்டு அடம்பிடித்த பயணியை, சமயோஜிதமாக செயல்பட்டு பணிப்பெண் அவரை சமாளித்துள்ளார். 
கார், பஸ், ரயில், விமான பயணம் என எதுவாக இருந்தாலும் சரி மக்கள் பலருக்கு ஜன்னலோரம் அமர்ந்து பயணிப்பதையே விரும்புவர்.
 
அப்படி ஜப்பானில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், தாம் ஜன்னல் ஓர சீட்டில் அமர வேண்டும் என கூறியுள்ளார். விடாமல் விமான பணிப்பெண்ணை ஜன்னல் சீட் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார்.
 
அந்த நேரத்தில் சமயோஜிதமாக யோசித்த பணிப்பெண், உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து அதில் மேகத்தை வரைந்து அதனை அந்த பயணியின் சீட் அருகே ஒட்டினார். இதைப்பார்த்து அந்த பயணி அமைதியானார். இந்த போட்டோவானது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்