பூமியை நோக்கி வரும் செயலிழந்த செயற்கைக்கோள்.. எங்கே விழும்? – விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி பதில்!

Prasanth Karthick
வியாழன், 22 பிப்ரவரி 2024 (08:47 IST)
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள் செயலிழந்த நிலையில் பூமியில் விழும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.



ஓசோன் மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1990ம் ஆண்டில் “க்ராண்ட்ஃபாதர்” என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது அது தனது சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகியுள்ளது,

பூமியின் ஈர்ப்புவிசையால் செயற்கைக்கோள் ஈர்க்கப்பட்டு பூமியில் விழ உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பூமியில் எந்த பகுதியில் செயற்கைக்கோளின் பாகங்கள் விழும் என்பதை கணிக்க இயலவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வளிமண்டலத்தை செயற்கைக்கோளின் பாகங்கள் அடையும்போது ஏற்படும் உராய்வு விசையால் செயற்கைக்கோளின் பெரும்பான்மை பாகங்கள் எரிந்து விடும் என்றாலும் சில பாகங்கள் பூமியில்தான் விழும்.

அவற்றை பெரும்பாலும் கடல் பகுதியில் விழுமாறு செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் இதுபோன்ற ஏராளமான செயலிழந்த செயற்கைக்கோள்கள் உடைந்து துகள்களாக மாறி பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்