150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (09:57 IST)
மெக்ஸிகோவில் லாரி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் கடந்த ஒரு மாதமாக கண்டெய்னர் லாரி ஒன்று அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் நேற்று அந்த லாரியில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசவே, அப்பகுதிவாசிகள் இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்துவிட்டு பேரதிர்ச்சிக்கு அளாகினர். ஏனென்றால் அதில் 150 க்கும் மேற்பட்ட பிணங்கள் இருந்தது. அவை எல்லாம் ஒரு மாதத்திற்கு முன் இறந்த மனிதர்களின் உடல்கள் ஆகும். 
இவர்களுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை என்பதால், பிணத்தை அப்படியே புதைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் புதைக்க இடம் இல்லாததால் கடைசியில் இப்படி தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறார்கள். விரைவில் புதைக்க இடம் தயார் செய்யப்பட்டு அந்த பிணங்கள் புதைக்கப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்