திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரி பதவியில் இருக்கும் ராஜசேகர் பாபு, தனது சொந்த ஊரில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனையில் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் கிறிஸ்துவ மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நடத்தை விதிமுறைகளை அவர் மீறிவிட்டார் என்று தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
"ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது சொந்த ஊரில் உள்ள சர்ச் பிரார்த்தனையில் கலந்துகொண்டது தேவஸ்தானத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இதே காரணங்களுக்காக 18 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஜசேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.