இண்டர்நெட் இல்லாமல் CHAT.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி..!

Siva

புதன், 9 ஜூலை 2025 (07:41 IST)
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உட்படப் பல சாட்டிங் மற்றும் சமூக வலைதளங்கள் இருந்தாலும், அவை செயல்படுவதற்கு இன்டர்நெட் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், இன்டர்நெட் இல்லாமல் தகவல்களை பகிர முடியும் என்ற வகையில் ஒரு செயலியை, ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். இதனால், இனிமேல் இன்டர்நெட் இல்லாமலேயே சாட் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
 
இன்டர்நெட் சேவை இல்லாமல் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் 'பைட்சாட்' (BITCHAT) என்ற புதிய செயலியை ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். ப்ளூடூத் தொழில்நுட்பத்தை சங்கிலி தொடர் போல பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இயங்குவதற்கு இன்டர்நெட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது இன்டர்நெட் கிடைக்காத நேரங்களில் அல்லது இன்டர்நெட் செயல்படாத நேரங்களில் பயன்படுத்த ஏற்ற வகையில் இருப்பதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 'பைட்சாட்' என்ற புதிய செயலி தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்