சீனாவில் ஒரு மாதத்தில் கொரொனாவால் 60 ஆயிரம் பேர் மரணம்

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (19:25 IST)
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்  குறைந்துள்ளதை அடுத்து  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் மேற்கொண்ட பரிசோதனையில் 95 சதவீதம் பேருக்கு உருமாறிய BF 7 ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தான் 95% பரவியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து, உலக நாடுகளுக்கும் எச்சரித்தது.

இந்த நிலையில்,  தற்போது கொரொனா தொற்று பரவல் குறைந்துள்ளது.

எனவே சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால்  2,40,000 பயணிங்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  கொரொனா தொற்றால் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜனவரி  12ஆம் தேதிவரை   60,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொரொனாவில் இருந்து மக்களை  பாதுகாக்கும் பொருட்டு, உயிரிழப்பை தடுக்கும்  நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்