கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு: சீனாவில் இருந்து வெளியேறும் பயணிகள்!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:26 IST)
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்  குறைந்துள்ளதை அடுத்து  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் மேற்கொண்ட பரிசோதனையில் 95 சதவீதம் பேருக்கு உருமாறிய BF 7 ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தான் 95% பரவியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து, உலக நாடுகளுக்கும் எச்சரித்தது.

இந்த நிலையில்,  தற்போது கொரொனா தொற்று பரவல் குறைந்துள்ளது.

எனவே சீனாவில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வாய் சுமார் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்த நிலையில், அங்கிருந்து 2,40,000 பயணிங்கள் வெளியேறியுள்ளதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதாவது இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு கட்டத்தில் 26.2% இருந்த இந்த எண்ணிக்கை தற்போது, 48.9% ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்