உலக கொரோனா: பாதிப்பு 4.73 கோடி, குணமானோர் 3.40 கோடி:

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (07:00 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 4.73 கோடியாக அதிகரித்துள்ளது.
 
உலகம் முழுவதும் 47,313,005 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,211,002
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 34,025,786
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 12,076,217 என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,567,070 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 236,982 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,062,438 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,182,881 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 122,149 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,170,402 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,554,206 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 160,272 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 4,980,942 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்