என் சிக்ஸர் சாதனைகளுக்கு என் தாயின் சத்தான சாப்பாடுதான் காரணம் – இஷான் கிஷான் பதில்!

திங்கள், 2 நவம்பர் 2020 (17:11 IST)
மும்பை அணியின் இளம் வீரரான இஷான் கிஷான் டி 20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

22 வயதாகும் இஷான் கிஷான் மும்பை அணிக்காக சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் 100 சிக்ஸர்களைக் கடந்துள்ளார். மிக இளம் வயதில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் தனது சிக்ஸர் சாதனைகளுக்குக் காரணமாக இஷான் தனது தாயாரை கூறியுள்ளார். அதில் ‘இந்த சாதனைக்குரிய பெருமை என் தாயாருக்குத்தான் சேரும். அவர்தான் எனக்கு சத்தான உணவுகளைக் கொடுத்து வளர்த்தார்.’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்