இந்த நிலையில் தற்போது மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியபோதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி ஒரு இடத்தில் மட்டுமே குளிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வரிசையில் நின்று ஏராளமான மக்கள் குளித்து வருகின்றனர்.
மேலும் பழைய குற்றாலம், ஐந்தறிவு ,புலி அருவி ஆகிய பகுதிகளில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அங்கு குளியலை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.