500 ரூபாய் பெற்று இந்தியர்களை திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்கள் கைது

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (07:47 IST)
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்குவதற்காக போலி திருமணம் செய்து சான்றிதழ் சமர்ப்பித்த 30 இந்தியர்களும், அவரக்ளை திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வியாபாரம் உள்பட பல்வேறூ பணிகளுக்கூ சென்ற ஒருசிலர் விசா முடிந்தவுடன் அதிக நாட்கள் தங்குவதற்கு தாய்லாந்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்ததாக போலி சான்றிதழ் கொடுத்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி திருமணத்திற்காக இந்தியர்கள், தாய்லாந்து பெண்களுக்கு ரூ.500 முதல் ரூ.5000 வரை கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பணம் பெற்று போலி திருமணம் செய்த 30 பெண்களும், அவர்களை திருமணம் செய்த 30 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் இன்னும் பல இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்