இந்தியாவை பின்பற்றும் மலேசிய அரசின் நோக்கம் என்ன...?

திங்கள், 15 அக்டோபர் 2018 (16:15 IST)
இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட ஆதார் திட்டம் மக்களிடையே சிறிது முக சுளிப்புகள் இருந்தாலும் கூட் மத்திய அரசு இதில் ஆழமாக காலூன்றி உரிய  பயனாளர்களுக்கு சலுகைகள் சென்றடைய தேவையான அரசின் வழிமுறையாகவே ஆதார் திட்டத்தை செயப்படுத்தியது

மீபத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மிஸ்ரா ஓய்வு பெறும் முன்னர் அளித்த முக்கியமான தீர்ப்பகளில் இந்த ஆதார் திட்டம் செல்லும் என தீர்ப்பு அளித்தார்.
 
இந்நிலையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட திட்டமாக ஆதார் இருந்தாலும், மோடி த்லைமையிலான பா.ஜ.க அரசு 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஆதார் திட்டத்தை செயப்படுத்த முழு வீச்சில் இறங்கியது.அதில் வெற்றியும் பெற்றது. இதன் முக்கிய நோக்கமே மத்திய அரசின் திட்டங்கள் அனைத்த்ம்நேரடியாக மக்களை சென்றடைய வேண்டுன் என்பதே ஆகும்.
 
தற்போது உச்ச நீதிமன்றமும் ஆதார் செல்லும் என தீர்ப்பு அளித்ததால் ஆளும் பா.ஜா.அரசு மேலும் உற்சாகம் அடைந்துள்ளது.
 
இந்நிலையில் மலேசிய நாட்டு அரசும் இதே போன்று தங்கள் நாட்டிலும் ஆதார்  திட்டத்தை செயல்படுத்த மலேசிய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.மேலும் இது சம்பந்தமான செயல்களில் இறங்குவதற்கு அந்நாட்டின் நிதித்துறை மற்றும் அமைச்சகங்களின் பிரதிநிதிகள்  மத்திய வங்கி பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்