உலக அளவில் 3.83 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு:

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (07:01 IST)
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,47,714 பேருக்கு பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,90,179 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,88,35,514 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா பாதிப்புடன் 84,22,012 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 80,89,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 51,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 809 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால்  2,20,827 பேர் மரணம்
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் 72,37,082 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 63,517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது என்றும் இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 723 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,10,617 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்