நடிகையின் ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞருக்கு கிடைத்த தண்டனை!

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (10:07 IST)
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ். இவர் எக்ஸ் மேன் பஸ்ட் கிளாஸ், அமெரிக்கன் ஹசில், செரீனா,  உள்பட பல படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர்.

அண்மையில் ஜெனிபர் லாரன்சின் இணையதள கணக்குகளை ஒரு இளைஞர் ஹேக் செய்து, அதற்குள் இருந்த நிர்வாண படங்களை  திருடி வெளியிட்டு விட்டான். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஜெனிபர் லாரன் இதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது அந்தரங்க படங்கள் வெளியானது குறித்து ஜெனிபர் லாரன்ஸ் கூறும்போது, ‘‘என்னை பலர் சேர்ந்து கற்பழித்ததுபோல் இருக்கிறது’’என்றார்.

இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி ஜெனிபர் கணக்கை ஹேக் செய்து நிர்வாண படங்களை எடுத்த ஜார்ஜ் ஹரோபனோ என்ற 26 வயது இளைஞரை கைது செய்தனர்.

இதையடுத்து ஜார்ஜ் ஹரோபனோவுக்கு நீதிபதிகள் 8 மாதம் சிறை தண்டனை அளித்தும்தண்டனை காலம் முடிந்த பிறகு மேலும் 3 வருடங்கள் சில நிபந்தனைகளுடன் வெளியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்