அப்பாவை தொடர்ந்து பாம்பாக உருவெடுத்த பிரபல நடிகை!

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (11:55 IST)
சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தற்போது சற்று அதிகரித்து விட்டது என்றே கூறலாம். சிம்பு நடித்த 'போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆரம்பத்தில் கதாநாயகியாக மட்டும் தந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளார்.
பின்னர் நல்ல திரைப்படம் கிடைத்தால் போதும், அதில் நாயகி ரோல் கூட வேண்டாம் வலுவான கதாப்பாத்திரம் இருந்தால் மட்டும் போதும் தாரளமாக நடிக்கிறேன் என கூறி குணசித்திர நடிகையாக மாறினார். சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் 'நீயா 2' படத்தில் நடித்து வரும் வரலட்சுமியின் கதாப்பாத்திரம் குறித்த ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று  வருகிறது. 
கமல் நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நீயா படத்தின், இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் காமெடி நடிகர் பாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும்  இப்படத்தை எல்.கே.சுரேஷ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகை வரலட்சுமி இதில் பாம்பாக நடிக்கிறார்  என்பது இந்த போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது.
 
இதே போல் இவருடைய தந்தை சரத்குமாரும் இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் 'பாம்பன்' என்கிற படத்தில் பாம்பு வேடத்தில் நடித்து வருகிறார். இதனால் அப்பாவை தொடர்ந்து மகளும் பாம்பாக உருவெடுத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்