ராஜ்மாவில் செய்யலாம் சுவையான கட்லெட்...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ராஜ்மா - 1 கப் (உறவைத்து வேகவைத்தது)
நறுக்கிய பன்னீர் - 1 கப்
மசாலா ஓட்ஸ் - 80 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு தேவைக்கு
முட்டை வெள்ளைக் கரு - 2
பிரட் துாள் - 1 கப்
சமையல் எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
 
வேகவைத்த ராஜ்மாவை நன்கு மசித்துக் கொள்ளவும். இத்துடன், மசாலா ஓட்ஸ், பன்னீர் உட்பட அனைத்து மசாலாவையும் கலந்து, உருளைக்  கிழங்கு மசியலைப் போல பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றை சிறு சிறு வட்டங்களாக, வடை போல தட்டி, முட்டை வெள்ளைக் கருவில் தோய்த்து, அதன்பின், பிரட் துாளில் பிரட்டி,  கடாயி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையா ராஜ்மா கட்லெட் தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்