காரச்சாரமான மசால் வடை குழம்பு ஈஸியா செய்யலாம்..!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (12:18 IST)
மசால் வடையை வைத்து சுவையான மசால் வடை குழம்பு எப்படி செய்யலாம் என பார்ப்போம்.



குழம்புக்கு தேவையான பொருட்கள்: உரித்த சின்ன வெங்காயம் – 1 கப், குழம்பு மசாலா – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள், கடுகு – 1 தேக்கரண்டி, தக்காளி – 1, புளி – நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி.

வடை செய்ய தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1 கப், பச்சை மிளகாய் – 5, இஞ்சி – 1 சிறிய துண்டு, வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய்

முதலில் கடலைப்பருப்பை ஊற வைத்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து ரொம்ப தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மாவை உள்ளங்கை அளவு உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்து வந்ததும் கடுகை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி புளிக்கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், குழம்பு மசாலா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். மிதமான கொதிநிலை வந்ததும் பொறித்து வைத்த மசால் வடைகளை அதில் சேர்க்க வேண்டும். முன்னதாகவே மசால் வடையை சேர்த்தால் மிகவும் ஊறி உடைந்து விடும்.

இப்போது நல்ல கொதி வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் சூடான சுவையான மசால் வடை குழம்பு தயார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்