வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Mahendran

செவ்வாய், 20 மே 2025 (19:08 IST)
தினமும் நீரைக் குடிப்பது நம் உடலுக்குத் தேவையான ஒரு அடிப்படை பழக்கம். ஆனால், அதைக் காட்டிலும் மேலும் பயனளிக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. அது  காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரை குடிப்பது.
 
பண்டைய நாட்களிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, இன்று மருத்துவ ரீதியிலும் பல நன்மைகளை உறுதி செய்துள்ளது. வெந்நீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. நமது உடலில் தேங்கிய நச்சுப்பொருட்கள் வெளியேறி, தொண்டை வலி, இருமல் போன்ற குறைபாடுகள் குறைய வாய்ப்பு உண்டு.
 
செரிமானம் சரியாக நடக்க வெந்நீர் பெரிதும் உதவுகிறது. குடல் இயக்கத்தை தூண்டி, கழிவுகளை வெளியேற்றுவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் குறையும்.
 
மேலும், வெந்நீர் குடிப்பதால் உடல் எடை கட்டுப்பாட்டிலும் நன்மை கிடைக்கும். வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் இது, கலோரிகளை எரிக்க உதவுகிறது. பசியை குறைத்து, தேவையற்ற உணவுகளை தவிர்க்கச் செய்கிறது.
 
மூட்டு வலி, தசை வலி, மாதவிடாய் வலி  இவற்றுக்கும் வெந்நீர் ஒரு இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்