தேவையானவை: புளி, கடுகு, மஞ்சள், பெருங்காயத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, வர மிளகாய், உப்பு தேவையான அளவு,
மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
புளியை வெந்நீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் புளிக்கரைசலை ஊற்ற வேண்டும். பின்னர் அரைத்த மிளகு, சீரக கலவையை அதில் சேர்க்க வேண்டும்.
நல்ல கொதி வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் கமகமக்கும் ரசம் தக்காளி இல்லாமலே தயார்.