சப்பாத்தி, பூரி மட்டும் இல்லாமல், கோதுமை மாவு மூலம் உங்கள் முகம், கழுத்து, கைகளை பொலிவூட்டவும் முடியும். அதற்கான செய்முறை இதோ:
ஒரு சின்ன பாத்திரத்தில் 3 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் பசும்பால், அரை ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலக்கவும்.
முதலில் பசும்பாலால் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு, கண் பகுதிகளை தவிர்த்து, முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலே அப்ளை செய்யவும். மெதுவாக மசாஜ் செய்யும் போது, இறந்த செல்கள் வெளியேறும், ரத்த ஓட்டமும் சிறந்ததாகும்.
பத்து நிமிடங்கள் காயவிடுங்கள். ஆனால் மிகவும் காய்ந்துவிட கூடாது. அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரால் மென்மையாக கழுவி, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தடவுங்கள்.