சுவை மிகுந்த மிளகு குழம்பு செய்ய !!

Webdunia
தேவையானவை: 
 
மிளகு - கால் கப்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
புளி - 50 கிராம்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
அரிசி - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
வெறும் கடாயில் அரிசியை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். 
 
வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக்  கொள்ளவும். 
 
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும். சுவை மிகுந்த மிளகு  குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்