சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பாலக் கீரையையும் சேர்த்து வதக்கவும். மேலும் சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பிறகு தயிரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.பின் கரம் மசாலா மற்றும் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான பாலக் சிக்கன் தயார்.