சுவையான சின்ன வெங்காய சட்னி செய்வது எப்படி....?

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (16:03 IST)
தேவையான பொருள்கள்:

சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 6
புளி - தேவையான அளவு
வரமிளகாய்  - 4
நல்லெண்ணெய்  - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிதளவு



செய்முறை:

சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும். மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய், தேவையான உப்பு ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சட்னி பதத்தில் அரைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த சட்னி கலவையை கொட்டி பச்சை வாசனை போகும் வரை கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான சின்ன வெங்காயச் சட்னி தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்