பீர்க்கங்காய் சட்னி எப்படி செய்வது...?

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (15:06 IST)
தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 1 (தோல் சீவி நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (சிறியது, நறுக்கியது)
புளி - 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 6
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு பிறும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பிறும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.

பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இறுதியில், ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு பிறும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும். இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்