விக்ராந்த் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (15:53 IST)
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

நடிக்க வந்த குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய வெற்றிப் படங்களை தந்த விஜய் சேதுபதி, தனது 25வது படமான 'சீதக்காதி' படத்தின் வெளியீட்டுக்கான காத்திருக்கிறார்.


இதையடுத்து விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்காக திரைக்கதை, வசனம் எழுதவுள்ளாராம் விஜய் சேதுபதி. இப்படத்தை  விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்குகிறார்.

வெண்ணிலா கபடி குழு 2, பக்ரீத், சுட்டுப் பிடிக்க உத்தரவு ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விக்ராந்த். இதன் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு புதிய படத்திற்கான பணிகள் தொடங்குகிறார்.

முன்னதாக விஜய் சேதுபதி தான் நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்கு அவரே வசனங்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்