மணமகனுக்கு டெங்கு காய்ச்சல்: கடைசி நேரத்தில் நின்ற திருமணம்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (15:48 IST)
புதுக்கோட்டையில் மணமகன் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது.
 
தமிழக மக்களை தற்பொழுது டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. ஏராளமானோர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அன்றாடம் இதனால் பலர் உயிரிழந்தும் போகிறார்கள்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் ஜீவிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்களால் முடிவுசெய்யப்பட்டு நிச்சயமும் நடைபெற்றுவிட்டது. நேற்று அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இரு வீட்டாரும் திருமண வேலைகளை மும்மரமாக செய்துகொண்டிருந்தனர்.
 
இதற்கிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பாண்டியன் மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும், அவர் உடனே அட்மிட் ஆகவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றும் கூறிவிட்டனர். 
 
இதனால் நேற்று நடைபெற இருந்த திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் இரு வீட்டாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்