சிம்பு, ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தின் இரண்டாவது டீசர்: ரிலீஸ் எப்போது?

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (19:52 IST)
சிம்பு ஹன்சிகா நடிப்பில் ஜமீல் என்பவர் இயக்கிய ‘மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்தது. அதன் பின்னர் விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் ‘மஹா’ திரைப்படத்தை ஒரு முன்னணி ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதும் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் இன்று ஹன்சிகாவின் பிறந்த நாளை அடுத்த இரண்டாவது டீசர் வெளியாகி உள்ளது. இதில் ஹன்சிகாவின் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் சிம்புவின் ஆக்சன் காட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என திட்டமிட்டுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்