மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகையானார்.
மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இதையடுத்து அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லை.
ஆனாலும் சோஷியல் மீடியா மூலமாக தொடர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அவரின் புகைப்படங்களுக்கு என்றே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இப்போது மாளவிகா மோகனன் பிரபல ராப் இசைக்கலைஞரான பாட்ஷாவோடு இணைந்து ‘TAUBA’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இது மாளவிகா நடிக்கும் முதல் இசை ஆல்பம் ஆகும்.