நாளை ரிலீஸாக இருந்த யோகி பாபுவின் ‘யானை முகத்தான்’ ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:00 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் அவர் நடித்த பொம்மை நாயகி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள யானை முகத்தான் திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென்று ஒருவாரம் தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வாரம் அதிக படங்கள் ரிலீஸாவதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்