ரி ரிலீஸில் மாஸ் காட்டியதா விஜய்யின் ‘சச்சின்’… வசூல் நிலவரம் என்ன?

vinoth

புதன், 23 ஏப்ரல் 2025 (15:27 IST)
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடித்து 2005ல் வெளியான படம் சச்சின். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் முதல் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதற்குக் காரணம் அப்போது வெளியான ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆனாலும் சச்சின் படத்தின் காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் அதன் பிறகு ஹிட்டாகின. இந்நிலையில்  2005ல் வெளியான இந்த படம் அதன் 20வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக கடந்த வியாழக்கிழமை ரீரிலீஸ் செய்யப்பட்டது.

ரி ரிலீஸில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதுவரை வெளியாகி 5 நாட்களில் இந்த படம் 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ரி ரிலீஸான விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் 20 கோடி ரூபாய் வரை வசூலித்து ரி ரிலீஸ் படங்களில் ஒரு பென்ச் மார்க்கை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்