வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு - பேய் மாமாவில் மாற்றம்!

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (17:57 IST)
தமிழ் சினிமாவில் பொக்கிஷ நடிகரான வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவின் அரை டஜன் படங்களில் தோன்றி இன்றளவும் பலரது ஃபேவரைட் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகவிருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படம்  ஏற்ப்பட்ட ஒரு சில பிரச்னைகளால் படம் பாதியிலேயே நின்று போனது. இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டதாக கூறப்பட்டது.   

 
இந்த கேப்பில் கிடு கிடுவென வடிவேலும் இடத்தை நிரப்ப சந்தானம் , சூரி போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்தார்கள்.  ஆனால், வடிவேலுவின் இடத்தை சரியாக பூர்த்தி செய்தவர் யோகி பாபு மட்டும் தான். அவரது யதார்த்தமான காமெடி , உடல் தோற்றம் உள்ளிட்டவை வெகுஜன ரசிகர்களால் விரும்பப்பட்டு குறைந்த கால இடைவெளியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தற்போது வடிவேலுவின் இடத்தில யோகி பாபு நிரப்பப்பட்டுள்ளார். 
 
ஆம், சார்லி சாப்ளின் 2 படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த பேய்மாமா படத்தில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். சங்கத்தில் வடிவேலு பிரச்சனை இன்னும் கிடப்பில் உள்ளதால்  அவரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக நடிகர் யோகி பாபுவை நாயகனாக வைத்து பேய் மாமா படத்தை உருவாக்கி வருகின்றனர்.  குமுளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. யோகி பாபுவுடன் இமான் அண்ணாச்சி, ரேஷ்மா, வையாபுரி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்